Vazhviyal Oham
Vazhviyal Oham

Tamizh – The First Language of The Universe

பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்
கல்தோன்றிமண்தோன்றாக்காலத்தே, வாளோடு
முன்தோன்றிமூத்தகுடி!

-புறப்பொருள் வெண்பா மாலை - கரந்தைப் படலம் 35 | குடிநிலை

என்னும் பாமாலையில் வரும்

"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு

முன் தோன்றி மூத்த குடி! "

 

நமக்கு உரைப்பது என்னவெனில், இந்த பூமிப்பந்தில் கல் தோன்றி மண் தோன்றும்முன்னரே நமது தமிழ் இனம் தோன்றியது என்பது மேலோட்டமான பொருள். அப்படியானால் உலகத்தில் மனித இனம் தோன்றும் முன்னரே தமிழ் மொழி தோன்றியதா? அது எப்படிச் சாத்தியப்படும் என்பன போன்ற கேள்விகள் அனைவருக்கும் எழுவது இயல்பே. இதனாலேயே, இந்த வெண்பாவிற்கு விளக்கம் எழுதிய பெரும்பாலானவர்கள் கல்லையும் மண்ணையும் ஐந்திணைகளுடன் இணைத்து விளக்கங்கள் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளார். உண்மையில், இதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் தேவை.

 

அதாவது சுமார் 4.58 பில்லியன் வருடங்களுக்கு முன்புதான் பூமியானது ஒரு கல்லாகத்தோன்றியது. அப்படிப்பட்ட பூமி கல்லாய் தோன்றிய காலத்திற்கு முன்பே  தோன்றிய மொழி உலகின் மூத்த குடியான தமிழ் மொழி என்பது இந்தப் பாடலின் உட் கருத்து.  வாளோடு என்பதற்குப் பாதுகாக்க என்பதாகப் பொருள்.  ஏனெனில் , இந்த உலகம் போராலும், பட்டினியாலும், பிணியாலும் பாதிக்கப்படும்போது உண்மையான தமிழும், தமிழ் மருத்துவமும் மட்டுமே இந்த உலகத்தில் உள்ள மக்களைக் காக்க முடியும் என்பது சித்தர்களின் வாக்கு.

 

சரி, நாம் அறிவியலுக்கு வருவோம், அதாவது பூமி தோன்றுவதற்கு முன்பே தமிழ் மொழி தோன்றிவிட்டது. அப்படிப்பட்ட ஆதி மொழியைப் பயன்படுத்த ஆரம்பித்த ஆதி மனிதன் (மூத்த குடி) தமிழன் என அடையாளப்படுத்தப்பட்டான். சரி, இந்தப் பாடலின் குறிப்பிற்கு ஆதாரங்கள் எவை என்பதை முதலில்  பார்ப்போம்.

 

முதலில், Otzi எனப்படும் 5300 வருடங்களுக்கு முந்தைய மனித உடலின் கூறுகளை வைத்து ஆராய்ந்து அந்த மனிதன் எப்படிப் பேசியிருப்பார் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த Otzi  என்ற கற்கால மனிதனின் கிட்டத்தட்ட முழுமையான உடல் 1991 வருடம் ஆஸ்திரிய நாட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டது. பின்பு முழுமையாக ஆராய்ச்சி செய்ததில் இது தான் தற்போது வரை கிடைத்திருக்கும் மனித உடல்களிலேயே பழமையான உடல் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது கி.மு.3300 வருடத்திய மனிதனைச் சேர்ந்தது என்பது ஆய்வாளர்களின் முடிவு. இந்த மனிதன் எப்படி இறந்தான்,கடைசியாக உண்ட உணவு என்ன, ரத்த மாதிரிகள் என்னென்ன, அவன் பேசிய மொழிகள் என்ன என அனைத்தும் ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவன் பேசிய மொழிகள் எப்படி உச்சரிக்கப்பட்டிருக்கும் என்பதைக் கணினியின் மூலம் உருவாக்கியதில் ஒரு ஆச்சரியத்தைக்க உண்மை வெளிப்பட்டுள்ளது. அந்தப் பழமையான மனிதனின் உச்சரிப்பில் உள்ள  ஆ,  ஈ, ஊ, ஏ, ஓ.  இந்த எழுத்துக்கள் அனைத்தும் தமிழ் மொழியில் உள்ளன. இதன் ஒலி விளக்கங்களை இங்குக் காணலாம்.

 

 

https://www.youtube.com/watch?v=_FUH4xpYUMs

 

https://www.youtube.com/watch?v=qoHtBHBiM3M

http://www.ancient-origins.net/news-science-space/otzi-speaks-scientists-reconstruct-voice-5300-year-old-iceman-006695

 

சரி, இவற்றைப்போலவே பழமையான இந்திய மொழிகளிலோ அல்லது உலக மொழிகளிலோ உண்டா என்று சரி பார்க்கவேண்டும். இப்படிப் பார்ப்பதற்கு தகுதியான மற்ற மொழிகள் யாதெனில், உலகத்தின் பழமையான மொழிகள் என மொத்தம் ஏழு மொழிகள் கண்டறியப்பட்டுள்ளது. அவைகள்,

 

தமிழ்

சமஸ்க்ருதம்

கிரேக்கம்

லத்தீன்

ஹீப்ரு

பெர்சியன்

சீனா


இந்த மற்ற ஆறுமொழிகளில் சமஸ்க்ருதத்தை தவிர, மேற்கண்ட இந்த உச்சரிப்புகள் தனியாக எந்த மொழியிலும் வரவில்லை. அதேநேரத்தில், சமஸ்க்ருதத்திற்கு என்று தனியாக எழுத்துக்கள் இல்லை. இது, தமிழில் வட்டெழுத்துக்கள் இருந்த காலத்தில் இருந்து பிரிந்து (சமஸ்க்ருதம் = சமஸ் + க்ருதம் ; சமஸ் = சமமான , க்ருதம் = மொழி), தேவாங்கிரி என்னும் எழுத்து வகைகளை எடுத்துக்கொண்டது. ஆகவே, தமிழ் மட்டுமே இந்த அனைத்து உயிர் எழுத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது.

 

சரி, தமிழில்தான்  இப்படி ஆதிமனிதனின் மொழி உள்ளன என்பதற்கான ஆதாரங்கள் உள்ளனவா என்று பார்த்தல், உண்டென்றுதான் சொல்லவேண்டும். குறிப்பாகத் திருமூலரும் திருவள்ளுவரும் தெள்ளத்தெளிவாக தங்களின் பாடல்களில் உணர்த்தியுள்ளார்கள்.

 

திருமூலர் இந்தப்  பிரபஞ்சமும் உலகமும் எப்படி உருவானது என்பதைத் திருமந்திரம் நான்காம் தந்திரம், பதிகம் பன்னிரண்டில் புவனாதி சக்கரம்  (புவனம் + ஆதி = புவனாதி ; புவனம் = பிரபஞ்சம் , ஆதி = முதலில்) சக்கரம் (சக்கரம் போல் சுழலும் தன்மை கொண்டது) அதாவது சுழலும் பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதைப்  பன்னிரண்டு பாடல்களில் கூறியுள்ளார். அதில் முதன்மையானது,

 

ககராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை

அகராதி ஓர் ஆ றரத்தமே போலும்

சகராதி ஓர்நான்கும் தாம்சுத்த வெண்மை

ககராதி மூவித்தை காமிய முத்தியே. (தி.ம.1282 )

 

இதில் அகராதி (அகரம் + ஆதி) ஓராறும் என்பது ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ. இவை தமிழில் உள்ள உயிர் நெடில் எழுத்துக்கள். இவற்றில் இருந்துதான் இந்தப் பிரபஞ்சம் உருவாகியுள்ளது என்பதைத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

 

அதேபோல், திருமந்திரம் நான்காம் தந்திரம், பதிகம் பதிமூன்றில் நவாக்கரி சக்கரம் என்னும் நூறு பாடல்களில் , இந்த மனித உலகம் உட்பட ஒன்பது கோள்களும் எப்படி உருவானது என்பதைத் தெளிவாக திருமூலர்  குறிப்பிட்டுள்ளார். அவற்றில் முதல் இரண்டு பாடல்கள்,

 

நவாக்கரி சக்கரம் நான்உரை செய்யின்

நவாக்கரி ஒன்று நவாக் கரியாக

நவாக்கரி எண்பத் தொருவகை யாக

நவாக்கரி அக்கிலீம் சௌம்முதல் ஈறே  (தி.ம.1294 )

 

  

சௌம்முதல் அவ்வொடும் ஔவுடன் ஆம்கிரீம்

கௌவுமும் ஐமும் கலந்திரீம் சிரீம்என்

றொவ்வில் எழும்கிலீம் மந்திர பாதமாச்

செவ்வுள் எழுந்து சிவாயநம என்னவே (தி.ம.1295 )

 

இதனையே திருவள்ளுவரும் தமது முதல் குறளில் "அகரமுதல எழுத்தெல்லாம்" என்று ஆரம்பித்துள்ளார். இந்த அறிவியல் உண்மை இல்லாமல், இன்று உள்ள பெரும்பாலான உரையாசிரியர்கள் வெறும் கருத்துரை மட்டுமே திருக்குறளுக்கு எழுதி வைத்துள்ளனர்.

 

     

 

இப்படிப்பட்ட பிரபஞ்ச உற்பத்தி ஒலியையே தமது மொழியாக ஆதி மனிதன் உருவாக்கினான். அவனே தமிழன் என்று அடையாளப்படுத்தப்பட்டான். அதற்குள் அடங்கிய அறிவியலின் உண்மையின் சூத்திரத்தை இலக்கணம் என்று பெயரிட்டான். இந்த அறிவியலும் அதன் ரகசியமும் மனித குலத்திற்கு பயன்படும்படி மொழியையும் இலக்கணத்தையும் பயன்படுத்தி இலக்கியங்களைப் படைத்தான். அவைதாம், இன்று நாம் படிக்கும் அனைத்து இலக்கியங்களும், இதில் முக்கியமானது சைவ மற்றும் வைணவ இலக்கியங்கள் என்று மனிதனால் வகைப்படுத்தப்பட்ட  இலக்கியங்களில்தான் அதிக அளவு அறிவியல் பொதிந்துள்ளது.  ஏனெனில், அவைகள்யாவும் சித்தர்களால் எழுதப்பட்டது. இது புரியாமல் பெரும்பாலானவர்கள். இந்த இலக்கியங்களை இன்று மதத்தின் பெயரால்  சிலர் சடங்குகளாக மட்டுமே பயன்படுத்துவதால் உண்மையான அறிவியல் மறைக்கப்படுகின்றது. இவ்வாறு மதத்தின் பெயரால் ஒதுக்குவது தமிழையும் தமிழ் அறிவியலையும் ஒதுக்குவதற்கு ஒப்பாகும்.  இப்படிப்பட்ட பிரபஞ்ச உற்பத்தி மொழியாகிய தமிழாலேயே உலக சமூகத்திற்கு தீங்கு வரும்போது காக்கமுடியும். வேறு எவற்றாலும் இந்த உலகத்தைக் காக்க முடியாது. ஏனெனில் இதுவே உண்மையான அறிவு அதுவே மூலம்,

 

இதைத்தான் திருமூலரும்,

 

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே  --திருமந்திரம்

 

நம் இலக்கியஙளுக்குப் பாடுபொருள்களாக அமைவன அகப்பொருள்களும் புறப்பொருள்களும். அவற்றில் அறம், பொருள், வீடு ஆகிய  மூன்று பேறுகளை பற்றியும் கூறுவது அகப்பொருள் எனவும், அறம், பொருள், வீடு ஆகிய  மூன்று பேறுகளை தவிர்த்து கொடை, புகழ் முதலியன பற்றியும் கூறுவது புறப்பொருள் எனவும் பகுக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட இலக்கியங்ககளில்தான் நமது வாழ்வியல், பண்பியல், மருத்துவம், வானியல், சோதிடம், ஆன்மிகம், வர்மங்கள், விவசாயம், மக்கள் தொடர்பு, பொது வாழ்வியல் போன்ற பலப்பல மேலாண்மையையும் அறிவியலையும் ஆற்றலையும் வளமையோடும் செழுமையோடும் உள்ள தமிழில் நமது முன்னோர்கள் விட்டுச் சென்றுள்ளார்கள். இப்பேற்பட்ட தமிழ் மொழியைத் தனது தாய்மொழியாகக் கொண்டு நாம் பிறந்துள்ளோம். ஆகவே, இதை நாம் மட்டுமல்ல நமது அடுத்த தலைமுறையும் புரிந்துகொண்டு அமைதியான பசுமை உலகத்தைப் படைத்து  நமது தமிழுக்கு பெருமை சேர்ப்போம்..

 

 

நன்றி வணக்கம்

யோகி இராஜாபாபு