Vazhviyal Oham
Vazhviyal Oham

தமிழ் மொழி ஒரு தந்திர மொழி , தமிழ் மொழி ஒரு ஞான மொழி


கடந்த வாரம் வடஅமெரிக்க முருகன் கோவிலில் எமது சிறு உரையின் எழுத்து வடிவம். தமிழின் அறிவியல் பெருமை உணர்வோம் , தமிழை கற்போம். வாழ்க தமிழ். 

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே -- திருமந்திரம்

 

நினைத்தாலே முத்தி தரும் தலம் - திருவண்ணாமலை

 

அண்ணாக்கிற்கு மேலுள்ள மலை "திரு அண்ணா மலை (அல்லது மேரு மலை)"

 

திருவண்ணாமலைக்குச்  செல்ல உண்ணாமுலையம்மாளை பிடிக்கவேண்டும்.

 

உண்ணாமுலையம்மாள் யார் என்று தெரிவதற்கு முன்னாள் உண்ணும் முலை என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான், நம் தாயின் மார்பில் நாம் குழந்தையாய் பாலுண்ட இடம். இதற்கு என்று சில உருவ அமைப்புகள் உள்ளன. அதன்படி காம்பு என்பது அதன் உருவ அமைப்பில் உள்ள தனிச்சிறப்பு. இந்தக் காம்பு போன்ற அமைப்பு மனிதனுக்கு வாய்க்கு எட்டிய தூரத்தில் உள்ளது ஆனால் அதன் மூலம்  உண்ண முடியாது. அது தான் உள்நாக்கு (Uvala). இது மனிதனுக்கு மட்டுமே அமைந்துள்ள மிக மிகச் சிறப்பான ஒன்று. சில baboon வகை குரங்குகளுக்கும்  காணப்பட்டாலும் அது ஆரம்பகட்ட வளர்ச்சியில் நின்றுவிடுகின்றது.  இன்றை நவீன அறிவியலில் இதனைப்பற்றி பெரிய அளவில் ஆராய்ச்சிகள் தொடர்ந்தாலும் முழுமையாக யாரும் நிறைவு செய்ய இயலவில்லை, இருப்பினும் இந்த உள்நாக்கு  பேச்சுக்கு மிக உதவியாக இருப்பதைமட்டுமே இப்போதைக்கு நவீன உலகம் அறிந்திருக்கின்றது.

 

ஆனால்,  சிவனையும் முருகனையும் குருவாய் கொண்ட நமது சித்தர்கள் இதற்கு உண்ணாமுலையம்மாள் என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெயரிட்டுள்ளார்கள்.  இதைத்தான் ஆழ்வார்கள் திருமார்பு என்கிறார்கள். 

 

சரி இதற்கும், முருகனுக்கும் , தமிழுக்கும், தமிழ் தந்திர மொழி என்பதற்கும் அது எப்படி ஞான மொழியாகும் என்பதையும் பார்ப்போம். நமக்குச் சளி பிடிக்கும் முன்பு  இந்த உள் நாக்கில்தான் ஒரு சிறு அரிப்பாகத் தொடங்கும். பின்பு தும்மல் மற்றும் சளி என்று வெளிப்படுத்தும்.  ஏனெனில் நமது உடலில் சளி என்பது மார்பகத்தில் மட்டுமல்லாது உடலில் உள்ள எலும்புகள் மற்றும் கபாலத்திலும் சேர்த்துக்கொள்ளும்.  மார்புச் சளியை போக்கப் பெருமளவில் மூலிகைகள் பயன்படும். ஆனால், எழும்பு  மற்றும் கபால சளியைப் போக்க மூலிகைகள் மட்டுமே போதாது. அதற்குச்  சித்தர்களின் பலவிதமான மூச்சு மற்றும் ஒகப்பயிற்சிகள் உள்ளன,  சுருக்கமாக அவற்றிற்கு வாசி யோகம் என்று பெயர். இதனை மனித குலத்திற்கு  எல்லோரும் பயன்படும் வகையில் அறிமுகம் செய்து வைத்தது முகப்பெருமான். இதனைத்தான் நாம் பிரணவ மந்திரம் என்று கூறுகின்றோம். இதனை எல்லோராலும் எல்லா நிலையிலும் பயிற்சி செய்ய இயலாத காரியம். ஆகையால், முருகப்பெருமானும்  அவரின் வழி வந்த அகத்தியப்பெருமானும் இதனை ஒலி வாயிலாக அதாவது ஒரு மொழியின் வாயிலாகத் தினசரி பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார்கள். இலக்கணங்களை இதற்காக வகுத்தார்கள். இப்படித்தோன்றியது தான் தமிழ் மொழி. தமிழில் மட்டுமே இயல், இசை மற்றும் நாடகத்திற்கு  என்று தனித்தனியாக இலக்கணங்கள் விரிவாக உள்ளன. நமது தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் இந்த இலக்கணங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவையே. அவற்றில் சிலவும் மிக மிக அரிதான அதேநேரம் மிகுந்த ஆற்றல் மிக்கதும் மூன்று, அவைகள் கந்த சஷ்டி கவசம் , கந்த குரு கவசம்,  மற்றும் திருப்புகழ்.

 

இவையனைத்திலும் உள்ள சொற்கள் அனைத்தும் அண்ணாக்கில் படும்படியும், தமிழில் உள்ள என்னும் எழுத்து உள்நாக்கை தொடும்படியும் அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல் பாதத்களில் உள்ள கருத்துக்களும் இந்தச் சித்தர்களின் பயிற்சியை எப்படிச் செய்யவேண்டும் என்றும் விரிவாகவும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனால் , இந்தப் பதிகங்களையோ அல்லது தமிழை மட்டுமே முறையாகத்  தொடர்ந்து சரியாகஉச்சரித்தாலோ கபால சளி அண்டாது , ஏனெனில் கபால சளிதான் எமன்.  நாம் பிறந்தது முதல் முப்பது வருடங்களுக்கு வாதம் (காற்று) நன்கு வேலை செய்யும், அடுத்த முப்பது வருடங்களுக்குப் பித்தம் ( சூடு) நன்கு வேலை செய்யும், அடுத்த முப்பது வருடங்களுக்கு கபம் (சளி) தொடங்கிவிடும் இப்பொழுதெல்லாம் ஐம்பது வயதை தாண்டியபிறகெல்லாம் சளி தொல்லை ஆரம்பமாகிவிடுகின்றது. என்ன மருந்துண்டாலும் சரியாகாத சளித்தொல்லை தமிழை முறையாகத் தினசரி புழக்கத்தில் உச்சரித்தாலே சளித்தொல்லை அண்டாது, நாம் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழலாம்.  ஆகவே, தமிழ் என்பது மொழி மட்டுமல்ல, அது அறிவியலை உள்ளடக்கியது, மனிதனின் உடற்கூறுகளை எப்பொழுதும் நன்கு இயங்கி வைக்கக்கூடியது, வாழ்வியலையும், செல்வச் செழிப்பை நமக்குத்தருவதும், ஞானத்தை புகுத்துவதும் மற்றும் எண்ணிலடங்கா நன்மைகளைத் தருவதுமாகும். ஆகவே, தமிழ்  பேசுவோம் தமிழில் பேசுவோம். 

 

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. நன்றி வணக்கம்.


December 16, 2017 @ Murugan Temple of North America by Rajababu